இந்தியா

அதானி வழக்கிற்காக இந்தியா பெரும் விலையை அமெரிக்காவுக்கு கொடுத்துள்ளது: ராகுல் காந்தி

அமெரிக்க நீதிமன்றம் அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி மீதான கிரிமினல் வழக்குகளை நிரந்தரமாகத் தள்ளுபடி செய்துள்ளதை அடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அமெரிக்க நீதித்துறையின் கோரிக்கையை ஏற்று நியூயார்க் மாவட்ட நீதிபதி நிக்கோலஸ் கரோஃபிஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இருப்பினும், குற்றச்சாட்டுகளின் தரம் குறித்து நீதிமன்றம் எந்த தீர்ப்பும் வழங்கவில்லை என்றும், வெளிநாட்டு ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் நீதிக்கு தடை விதித்ததாக கூறப்படும் பிற குற்றச்சாட்டுகள் மீதான முடிவு ஆகஸ்ட் 31-க்குள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நீதிமன்றத்தின் இந்த முடிவை சுட்டிக்காட்டியுள்ள ராகுல் காந்தி, சமரசம் செய்துகொண்ட பிரதமர் மோடி இந்தியாவின் நலன்களை விற்க நிர்பந்திக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இந்தியா பெரும் விலை கொடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

அதானி குழுமம் தாங்கள் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வருவதுடன், நீதிமன்றத்தின் முடிவை பணிவுடன் ஏற்பதாகவும் தெரிவித்துள்ளது. jurisdictional மற்றும் evidentiary சிக்கல்களைக் காரணம் காட்டியே நீதித்துறை இந்த வழக்குகளை திரும்ப பெற முயன்றது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்