இலங்கை

செம்மணியில் இன்றைய அகழ்வில் 05 என்பு கூடுகள் புதிதாக அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியின் 104 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் முன்னெடுப்பட்டன.

முதலாம் , இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத்தில் இதுவரையிலான 104 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 544 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 530 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 50ஆவது நாளான இன்றைய தினம் 05 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 06 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை புதைகுழிக்கு அருகில் எழுமாறாக தோண்டப்பட்ட இரு சோதனைக்குழிகளில் இருந்தும் இன்றைய தினமும் என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சான்று பொருட்கள் மற்றும் பிற பொருட்கள் சிலவற்றை உத்தியோகபூர்வ புகைப்படங்கள் இன்றைய தினம் எடுக்கப்பட்டு , அந்த புகைப்படங்களை நீதிமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இலங்கை

விபுலானந்தர் பிறந்த மண்ணான காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா -2025

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த மண்ணான கிழக்கு மாகாண, காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா காரைதீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் கே. சுதர்சனின் நெறிப்படுத்தலில்
இலங்கை

மீண்டும் வரலாற்றுச் சாதனை படைத்த கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (04.11.2025) வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்துள்ளது. அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்