இந்தியா

நாளை செப்டம்பர் 1ஆம் தேதி.. என்னென்ன மாற்றங்கள் அடுத்த மாதம் வரலாம்?

செப்டம்பர் 1 முதல் பொதுமக்களின் அன்றாட நிதி நடவடிக்கைகளில் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. குறிப்பாக வருமான வரி, எல்பிஜி சிலிண்டர், வங்கி கட்டணங்கள் மற்றும் ஜிஎஸ்டி தொடர்பான காலக்கெடுகளை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

சம்பளதாரர்கள் மற்றும் தொழில் செய்பவர்களுக்கான வருமான வரி தாக்கல் காலக்கெடு முடிவடைந்துள்ளது. தணிக்கைக்கு உட்படாத தொழில் அல்லது தொழில்முறை வருமானம் கொண்டவர்களுக்கு ஆகஸ்ட் 31 வரை அவகாசம் இருந்தது. காலக்கெடு தவறினால், வருமானத்தைப் பொறுத்து ரூ.1,000 அல்லது ரூ.5,000 வரை தாமதக் கட்டணம் விதிக்கப்படலாம்.

ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் e-KYC முடிக்காத வீட்டு எல்பிஜி நுகர்வோரும் ஆகஸ்ட் 31 காலக்கெடுவை கவனிக்க வேண்டும். மேலும், எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் சிலிண்டர் விலையை மறுபரிசீலனை செய்வதால், செப்டம்பர் மாத உள்நாட்டு மற்றும் வணிக சிலிண்டர் விலையையும் பொதுமக்கள் சரிபார்க்க வேண்டியுள்ளது.

வங்கிகளில் ஏடிஎம் பயன்பாடு, பணப் பரிவர்த்தனை, கணக்கு சேவைகள் உள்ளிட்ட சில கட்டணங்களும் வங்கிக்கு வங்கி மாறுபடலாம். இலவச பரிவர்த்தனை வரம்பை அடிக்கடி மீறுபவர்கள் கட்டண விவரங்களை கவனிக்க வேண்டும்.

மேலும், ஆகஸ்ட் மாத TDS/TCS தொகை செலுத்துவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 7. மாதாந்திர GSTR-1 தாக்கல் செப்டம்பர் 11-ம் தேதியும், GSTR-3B செப்டம்பர் 20-ம் தேதியும் முடிவடைகிறது. முன்கூட்டிய வரியின் இரண்டாவது தவணையை செப்டம்பர் 15க்குள் செலுத்த வேண்டும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்