இந்தியா

ஆதவ் அர்ஜுனா ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கல!. நிதியும் கொடுக்கல!.. மேயர் பிரியா கோபம்!…

சமீபத்தில் சட்டசபையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் தவெக அரசுடன் இணைந்து செயல்படவில்லை என கூறினார்.. மேலும் மாநகராட்சிகளில் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.. அதோடு வரவேற்கும் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து மாநகராட்சிகளிலும் தவெக கைப்பற்றும்.. அப்போது ஊழல் செய்த ஆதாரங்கள் வெளியிடப்படும்’ எனவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், திமுக விழா ஒன்றில் பேசிய மேயர் பிரியா‘ ஆதவ் அர்ஜுனா அவர்களை பார்த்து கேட்கிறேன்.. இதுவரை என்னுடைய மேஜைக்கு வந்து எந்த கோப்பு நின்றிருக்கிறது? நாங்கள் ஆட்சிக்கு வந்து இந்த திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம்.. அது அப்படியே மேயர் டேபிளில் இருக்கிறது.. எங்களை பணியாற்ற விடவில்லை’ என்று ஆதாரத்தோடு சொல்ல முடியுமா?..

எல்லாவற்றுக்கும் ஆதாரங்கள் கேட்கிறீர்கள்.. ஆட்சி அமைத்து மூன்று மாதங்கள் ஆகிறது.. இவ்வளவு பெரிய மாநகரத்திற்கு நிதி ஒதுக்காமல் திட்டங்களை செயல்படுத்தாமல் எங்கள் தலைவர் கொண்டு வந்த திட்டங்களுக்கு திறப்பு விழா மட்டும்தான் நீங்கள் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்.. இதுவரை ஒரு செங்கல்லை கூட நீங்கள் எடுத்து வைக்கவில்லை’ என ஆவேசமாக பேசியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்