சினிமா

‘கோட்’ படத்திற்கு பிறகு மீண்டும் கேமியோ ரோலில் கலக்கும் சிவகார்த்திகேயன்! அவரா ஹீரோ?

ஆல் ஏரியாவிலும் அண்ணன் கில்லி என்பதற்கு ஏற்ப எல்லா துறைகளிலும் புகுந்து விளையாடி வருகிறார் சிவகார்த்திகேயன். நடிகராக பாடகராக பாடல் ஆசிரியராக இயக்குனராக தயாரிப்பாளராக என எல்லா துறைகளிலும் கால் பதித்து வரும் சிவகார்த்திகேயன் இப்போது கேமியோ ரோலிலும் களம் இறங்கி இருக்கிறார். ஏற்கனவே விஜய் நடித்து பெரிய வசூல் சாதனை பெற்ற கோட் திரைப்படத்தில் கேமியோ ரோலில் கடைசி காட்சியில் வந்து நடித்து அசத்தியிருப்பார்.

அதிலிருந்து தான் அடுத்த தளபதி, அடுத்த விஜய் சிவகார்த்திகேயன் என அனைவரும் சிவகார்த்திகேயனை புகழாரம் சூடி வந்தனர். அதிலும் குறிப்பாக துப்பாக்கிய புடிங்க சிவா என்ற விஜய் சொல்லும் அந்த வசனம் தான் இன்று சிவகார்த்திகேயன் மீது அடிக்கடி வீசப்படும் வசனமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் இன்னொரு படத்திலும் கேமியோ ரோலில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் அதர்வா நடிக்கும் திரைப்படம் இதயம் முரளி. அந்த படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடிப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே தனுஷ், ரவி மோகன் ஆகியோரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிற.து கடைசியில் சிவகார்த்திகேயன் தான் அந்த கேமியோ ரோலில் நடிப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.

இன்னும் சில தினங்களில் இதயம் முரளி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைய இருக்கிறது. பிப்ரவரி மாதம் அந்தப் படத்தை ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருக்கிறார்கள். ஏற்கனவே சிவகார்த்திகேயனும் அதர்வாவும் பராசக்தி திரைப்படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர். அந்தப் படம் ஜனவரி பத்தாம் தேதி பொங்கல் ரிலீசுக்கு வெளியாக காத்துக் கொண்டிருக்கின்றது.

அந்த படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பும் இருக்கிறது. சிவகார்த்திகேயனைத் தாண்டி பராசக்தி திரைப்படத்தில் அதர்வாவின் நடிப்பு பெரிய அளவில் பேசப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் பராசக்தி திரைப்படத்திற்கு பிறகு இதயம் முரளி திரைப்படம் ரிலீஸ் ஆக இருப்பதால் இதயம் முரளி திரைப்படத்திற்கும் பெரிய ஒரு ஹைப் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்