இந்தியா

மதுரை மத்திய தொகுதிக்கு பிரச்சாரத்திற்கு போகாத உதயநிதி?.. பின்னணி இதுதான்!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகி சாதனை படைத்திருக்கிறது. ஏனெனில் கடந்த பல தேர்தலாகவே இந்த அளவுக்கு வாக்குகள் பதிவானதில்லை. முதல் நிலை வாக்காளர்களும், நிறைய இளைஞர்களும் இந்த தேர்தலில் வாக்களித்துள்ளனர். அதற்கு முக்கிய காரணம் விஜய் என்கிறார்கள். இந்த சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 20 சதவீத வாக்குகளை அள்ளும் என்கிறார்கள்.

ஒருபக்கம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடனேயே முதல்வர் ஸ்டாலின், அவரின் மகனும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் சீமான் போன்ற அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தமிழகத்தின் பல தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்தார்கள்.

முதல்வர் ஸ்டாலினை விட அவரின் மகன் உதயநிதி பல தொகுதிகளுக்கும் சென்று சூறாவளிப் பிரச்சாரம் செய்து திமுகவுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தார். அதேநேரம் அவர் பழனிவேல் தியாகராஜன் போட்டியிடும் மதுரை மத்திய தொகுதியில் மட்டும் பிரச்சாரத்திற்கு செல்லவில்லை.

இதற்கு பின்னணியில் இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. ஒன்று பழனிவேல் தியாகராஜரன் நிதியமைச்சராக இருந்தபோது உதயநிதி பற்றி அவர் தனக்கு நெருக்கமானவருடன் பேசிய ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால்தான் அவரிடமிருந்த நிதி அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. அது ஒரு காரணம் என்கிறார்கள்.

அடுத்து அந்த தொகுதியில் அதிமுக வேட்பாளராக இயக்குனர் சுந்தர்.சி போட்டியிடுகிறார். சுந்தர் சி உதயநிதிக்கு நெருக்கமானவர் அதாவது சுந்தரி.சி இயக்கும் அனைத்து திரைப்படங்களையும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் ஃபிலிம்ஸ் நிறுவனம்தான் தமிழகத்தில் வெளியிட்டு வருகிறது.. எனவே அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டாம் எனவும் உதயநிதி நினைத்திருக்கலாம் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்