சினிமா

பெண்களுக்கு பாலியல் தொல்லை!.. சிசிடிவி கேமரா காட்டி மிரட்டல்!.. யார் அந்த இசையமைப்பாளர்?!

இசையமைப்பாளர் ஒருவர் பல பெண்களிடம் பாலியல்ரீதியாக மோசமாக நடந்துகொண்டதோடு அதை சிசிடி கேமராவில் பதிவு செய்து மிரட்டி வருவதாக பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் கூறிய குற்றச்சாட்டு கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஸ்வாகதா தமிழ் சினிமாவில் பல படங்களில் பாடியிருக்கிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘நான் நிறைய படங்களுக்கு கோரஸ் பாடியுள்ளேன். வாய்ப்புக்காக சிலர் என்னை படுக்கைக்கு அழைத்தார்கள்.. அதை எல்லாம் செய்திருந்தால் பெரிய இடத்தில் இருந்திருப்பேன். என் திறமையை மட்டுமே நம்பி முயற்சி செய்தேன்.. ஆனால் நான் கஷ்டப்பட்டு பெற்ற இடத்தை ஒரு இசையமைப்பாளர் கெடுத்தார்.

அவரிடமிருந்து தப்பித்து நான் ரிஷிகேஷில் வாழ்ந்து வருகிறேன். அவரின் பெயரை இப்போது சொல்ல விரும்பவில்லை. என்னுடைய 9 வருட காதல் அவரால்தான் பிரேக்கப் ஆனது. அந்த இசையமைப்பாளிடம் நான் வேலை செய்து கொண்டிருந்தேன். அவர் குடும்பம், நண்பர்கள், மனைவி என எல்லோரிடமும் என்னை அறிமுகப்படுத்தினார். எனக்கு சில பாடல்களையும் பாடக் கொடுத்தார். ஒரு கட்டத்தில் எனக்கு சம்பளம் கொடுப்பதை நிறுத்திவிட்டார்.. என்னிடம் காசு இல்லை என்று சொல்லி என்னிடமிருந்து பணம் வாங்கினார்.

என்னிடம் பணம் வாங்கி அவரின் மனைவிக்கு ஐபோன் வாங்கி கொடுத்தார்.. ஒரு சொத்தை விற்ற பணம் என்னிடம் இருக்கிறது என அவரிடம் சொன்ன போது வேறு சில காரணங்களை சொல்லி அந்த பணத்தை என்னிடமிருந்து வாங்கிக் கொண்டார்.. வட்டியுடன் திருப்பித் தருவதாக சொன்னார்.. ஆனால் தரவில்லை.. அந்த காசை வைத்து சொகுசு கார், வீடு வாங்கினார். அவர் மனைவிக்கு தெரிந்துதான் இது எல்லாமே நடந்தது.

ஒருநாள் எனக்கு மோசமான சம்பவம் நடந்தது. இப்போது நினைத்தாலும் என் உடல் நடுங்குகிறது. திடீர்னு ஒரு நாள் என்னை பலவந்தமாக என்னிடம் தவறாக நடந்து கொண்டார்.. அது சவுண்ட் புரூவ் அறை என்பதால் வெளியே கேட்காது. சிசிடிவி கேமராவை காட்டி உன்னை அசிங்கப்படுத்தி விடுவேன் என பிளாக்மெயில் செய்தார்.. இப்படித்தான் பல பெண்களை பாலியல் ரீதியாக மோசமாக நடந்து அதை கேமராவில் பதிவு செய்து வைத்துக் கொண்டு அதை கொடூரமாக ரசிப்பார். சிறுமிகளை கூட விடவில்லை.

அமெரிக்காவில் Epstein Files பற்றி பேசுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் ராஜா ஒருவர் சென்னையில் இருக்கிறார்.. நான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டால் நான் சவுண்ட் கார்டை திருடி விட்டேன் என்று என் மீது பொய்யாக குற்றம் சொன்னார். என்னைபற்றி எனக்கு நெருக்கமானவர்களிடம் தவறாக சொன்னார். இதற்கெல்லாம் அவரின் மனைவியும் உடந்தையாக இருந்தார். அவருக்கெல்லாம் விருது கொடுக்கிறார்கள். ஆனால் உண்மையில் அவருக்கு பியானோ கூட வசிக்க தெரியாது. நான் போலீஸில் புகார் அளித்து விடுவேனோ என பயந்து வீட்டில் வந்து என் காலில் விழுந்தார்.. புகார் கொடுக்க வேண்டாம் என கெஞ்சினார்.

விஜய் டிவி பிக் பாஸில் கலந்து கொண்ட மாயா என் சகோதரி. அவள்தான் என்னை காப்பாற்றினார். ஜி.வி பிரகாஷ், ஜிப்ரான், அனிருத், இமான் ஆகியவர்கள் தொழில் ரீதியாக சரியாக இருப்பார்கள்.. ஆனால் அந்த இசையமைப்பாளர் அப்படி இல்லை. அவரிடமிருந்து தப்பி தற்போது ரிஷிகேஷ் வந்து செட்டில் ஆகிவிட்டேன்.. ஒரு நாள் அவரின் பெயரை நான் சொல்வேன்’ எனவும் கூறியிருக்கிறார்..

தற்போது ஸ்வாகதா ரிஷிகேஷில் பெண்கள் ஆடை தொடர்பான ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரின் பேட்டி வெளியானதை அடுத்து ‘யார் அந்த இசையமைப்பாளர்?’ என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்