இந்தியா

தேர்தல் முடிவே வரவில்லை.. அதற்குள் மதிமுகவின் 75 நிர்வாகிகள் ராஜினாமா.. வைகோ அதிர்ச்சி..!

மதிமுக மாநில இளைஞரணி துணை தலைவர் லோ. சோமசுந்தரம் மற்றும் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் கோபால் உள்ளிட்ட 75 நிர்வாகிகள் தங்கள் கட்சி பொறுப்புகளை ராஜினாமா செய்துள்ளனர்.

மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட சீட் கேட்டபோது, துரை வைகோ பயன்படுத்திய சில வார்த்தைகள் தங்களை காயப்படுத்தியதே இந்த முடிவுக்கு காரணம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு கணேசமூர்த்தியின் நினைவு நாள் நிகழ்வின் போது, நிர்வாகிகள் சீட் ஒதுக்கீடு குறித்து கோரிக்கை வைத்துள்ளனர். அப்போது துரை வைகோ, “பதவி, பொறுப்பு என்பதெல்லாம் கட்சி போடும் பிச்சை” என்று கடினமான வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சொல் தங்களின் சுயமரியாதையை பாதித்ததாக சோமசுந்தரம் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நேரத்தில் குழப்பம் விளைவிக்க விரும்பாமல், கட்சி அறிவித்த வேட்பாளருக்காக உழைத்த பின்னரே தற்போது இந்த ராஜினாமா முடிவை எடுத்துள்ளனர். பொறுப்புகளை துறந்தாலும், ஆயுள் முழுவதும் மதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களாக தொடர்வோம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சுயமரியாதை பேசும் கட்சியில் நிர்வாகிகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதே இவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்