உலகம்

பாகிஸ்தானில் இருந்து வெளியேறும் UAE தொலைத்தொடர்பு நிறுவனம்.. என்ன காரணம்?

UAE-வை சேர்ந்த முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ‘எடிசலாட்’ பாகிஸ்தானின் தொலைத்தொடர்பு துறையிலிருந்து வெளியேற பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் டெலிகம்யூனிகேஷன் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் தனக்குள்ள பங்குகளை விற்பனை செய்வது மற்றும் சந்தையிலிருந்து வெளியேறுவது குறித்து அந்த நிறுவனம் தற்போது ஆய்வு செய்து வருகிறது.

உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற சூழல் மற்றும் பிராந்திய மோதல்களுக்கு மத்தியில், வளைகுடா முதலீட்டாளர்களின் புதிய உத்தி மாற்றமாக இது பார்க்கப்படுகிறது.

இந்த வெளியேற்ற முடிவிற்கு உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன.

PTCL நிறுவனத்தில் பாகிஸ்தான் அரசு 62 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளது. எடிசலாட் நிறுவனம் 26 சதவீத பங்குகளை வைத்திருந்தாலும், அந்த நிறுவனத்தின் மேலாண்மை கட்டுப்பாட்டை தன்வசம் வைத்துள்ளது.

மேலும், எடிசலாட் மற்றும் பாகிஸ்தான் அரசுக்கு இடையே 2005-ஆம் ஆண்டிலிருந்து நீண்டகால நிதி தகராறு நிலவி வருகிறது. 2005-ல் 26 சதவீத பங்குகளை 2.6 பில்லியன் டாலருக்கு ஏலம் எடுத்த எடிசலாட், அதில் 1.8 பில்லியன் டாலரை செலுத்தியது.

ஆனால், சில சொத்துக்களை தன் பெயருக்கு மாற்ற பாகிஸ்தான் அரசு தவறியதால், மீதமுள்ள 800 மில்லியன் டாலரை அந்த நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. தற்போது இந்த வெளியேற்றத் திட்டம் ஆரம்பகட்ட மதிப்பாய்வில் உள்ளதால், இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த