ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து திடீர் தாக்குதல் நடத்த அமெரிக்காவில் விரிவான திட்டம் தீட்டப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. இதேவேளையில், ஈரான் யாரும் எதிர்பார்க்காத வேகத்தில் தனது ராணுவ உற்பத்தி தொழிற்சாலைகளின் உற்பத்தி பணிகளை துவங்கியிருப்பதாகவும், தற்போது தாக்குதல் நடத்தினால் அனைத்து முனைகளில் இருந்தும் தாக்குதல் நடத்த ஈரான் தயாராக இருப்பதாக அமெரிக்க உளவு அமைப்புகள் டிரம்ப்-க்கு தகவல் தெரிவித்துள்ளன.
ஈரான் தற்காலிக போர் நிறுத்த காலம் துவங்கிய நாளில் இருந்து தனது ட்ரோன் உற்பத்தி தளத்தை முழுமையாக மீண்டும் தொடங்கியுள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான ட்ரோன்களை உற்பத்தி செய்யும் அளவுக்கு உற்பத்தி வேகத்தை அதிகரித்துள்ளது. மேலும், ஈரானின் ஏவுகணை ஏவும் தளங்களில் மூன்றில் இரண்டு பங்கு இப்போது செயல்பாட்டில் உள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் அமெரிக்க ராணுவ வட்டாரங்களில் தற்போது, “ஈரான் எங்களுடைய எதிர்பார்ப்புகளை விட மிக வேகமாக தனது ராணுவ உற்பத்தியை மீண்டு வருகிறது” என அதிர்ச்சி அடைந்துள்ளதாக அமெரிக்க பத்திரிக்கைகளிடம் தெரிவித்துள்ளனர். மேலும் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஈரானுக்கு ஏவுகணை மற்றும் ட்ரோன் பாகங்கள் அளித்து முக்கிய உதவிகளை வழங்கி வருவதாகவும் CNN தெரிவித்துள்ளது.
ஈரான் தரப்பில் கடந்த வாரமே கடந்த போரில் பல பாடங்களை கற்றதாகவும், அமெரிக்காவின் 42 விமானங்களை சுட்டு வீழ்த்தியது மூலம் எப்படி தாக்க வேண்டும் என அனுபவம் பெற்றதாகவும் தெரிவித்தது. இதுமட்டும் அல்லாமல் அடுத்த தாக்குதல் அமெரிக்கா, இஸ்ரேல் படைக்களுக்கு பல சர்ப்ரைஸ் உள்ளது என தெரிவித்தது.

