சினிமா

தனுஷ் இயக்கத்தில் ஹீரோவாக களமிறங்கும் யாத்ரா… அதுவும் தலைவர் ஸ்டைலில்!

தமிழ் சினிமாவில் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, பாடலாசிரியர், பாடகர் என பன்முகத்திறமைகளுடன் ஆல்-ரவுண்டராக மாஸ் காட்டி வருபவர் நடிகர் தனுஷ். கடந்த 2002-ல் தன் தந்தை கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை படம் மூலம் திரையுலகில் அறிமுகமான தனுஷ், இன்று ஹாலிவுட் வரை தன் கொடியை நாட்டியுள்ளார். இவரது திரைப்பயணத்தில் காதல் கொண்டேன் , புதுப்பேட்டை , யாரடி நீ மோகினி , அசுரன்’ எனப் பல பிளாக்பஸ்டர் வெற்றிகள் உள்ளன.

ஒரு கட்டத்தில் வொண்டர்பார் பிலிம்ஸ் என்ற சொந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, பல தரமான படங்களைத் தயாரித்தார். இடையில் சில படங்களின் தோல்வியால் தற்காலிகமாக முடங்கிய இந்த நிறுவனம், தற்போது மீண்டும் சுறுசுறுப்பாக படங்களைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளது.

நடிகராக மட்டுமல்லாமல், ராஜ்கிரண் நடிப்பில் வெளியான பவர் பாண்டி படத்தின் மூலம் தன்னை ஒரு கிளாசிக் இயக்குனராகவும் தனுஷ் நிரூபித்தார். அதனைத் தொடர்ந்து, தனது 50-வது படமான ராயன்’ திரைப்படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் வெற்றி கண்டார். தற்போது இவரது இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை’ ஆகிய படங்கள் வெளிவந்தன.

இந்நிலையில், தனுஷின் குடும்பத்திலிருந்து அடுத்த தலைமுறை வாரிசு கோலிவுட்டில் தடம் பதிக்கவுள்ள ஹாட் நியூஸ் தான் தற்போது ஒட்டுமொத்த சினிமா வட்டாரத்தையும் உற்று நோக்க வைத்துள்ளது. தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியின் மூத்த மகனான யாத்ரா, எப்போது சினிமாவில் அறிமுகமாவார் என்ற எதிர்பார்ப்பு கடந்த சில ஆண்டுகளாகவே ரசிகர்களிடம் இருந்து வந்தது. தற்போது அது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

யாத்ரா சினிமாவில் அறிமுகமாகும் முதல் படத்தை தனுஷே இயக்கவுள்ளார். ஆர்டேக் ஸ்டூடியோஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த திரைப்படத்தில், யாத்ரா ஒரு விசித்திரமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அதாவது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆரம்பகால 70-80களின் ரெட்ரோ படங்களை நினைவூட்டும் வகையிலான ஒரு செம்ம மாஸான கேரக்டரில் யாத்ரா நடிக்கவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. விரைவில் யாத்ராவிற்கான லுக் டெஸ்ட் நடத்தப்பட உள்ளது. தனுஷின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான வேல்ராஜ் இப்படத்திற்கு கேமரா கையாள்கிறார். அதேபோல் தனுஷிற்கு பொல்லாதவன் , ‘ஆடுகளம்’, ‘மயக்கம் என்ன’, ‘அசுரன்’ எனப் பல மிரட்டலான இசையைக் கொடுத்த ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

அப்பாவின் இயக்கம், தாத்தாவின் ஸ்டைல், வேல்ராஜின் விஷுவல்ஸ் மற்றும் ஜி.வி.பிரகாஷின் மியூசிக் என இந்த ‘மெகா கூட்டணி’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை இப்போதே எகிற வைத்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்