சினிமா

விஜய் ஃபேன்ஸ் அடிப்பாங்க!.. ஜெயிலர் 2 ஹிட் அடிச்சே ஆகணும்!.. ரஜினி போட்ட ஆர்டர்!..

ஜெயிலர் பட விழாவில் காக்கா – கழுகு கதையை ரஜினி சொன்ன பின் விஜய் ரசிகர்களுக்கு அவர் எதிரியாக மாறிவிட்டார். அந்த படத்திற்கு பின் வேட்டையன் படம் வெளிவந்த போது அந்த படத்திற்கு எதிராக நெகட்டிவ் விமர்சனங்களை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பினார்கள்.

அதனாலே அந்த படம் தோற்றுப் போனதாக சொல்லப்படுகிறது. தற்போது ரஜினி நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக நடந்து வருகிறது. இதற்கு ரஜினியும் ஒரு காரணம் என்கிறார்கள். இந்த படம் 100 சதவீதம் ஒரு முழுமையான வெற்றி படமாக இருக்க வேண்டும்.. ஒரு சதவீதம் கூட மிஸ் ஆகக்கூடாது என நெல்சனிடம் ரஜினி கறாராக சொல்லிவிட்டாராம்.

மேலும், கண்டிப்பாக ஜெயிலர் 2 படம் வெளியாகும்போது படத்துக்கு எதிராக விஜய் ரசிகர்கள் நெகட்டிவ் விமர்சனங்களை பரப்புவார்கள். அதற்கு இடம் கொடுக்காத படி படம் அசத்தலாக இருக்க வேண்டும் எனவும் சொல்லிவிட்டாராம். இதையடுத்தே பல காட்சி மீண்டும் ரீஷூட் செய்து வருகிறாராம் நெல்சன்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்