கனடா

கனடாவில் பொலிஸாரை தாக்க முயன்ற குற்றவாளி சுட்டுக் கொலை

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம் புரூக்ஸ் நகரில், பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளார். கடந்த புதன்கிழமை மாலை 4 மணியளவில் கிரீன்புரூக் வில்லேஜ் பகுதியில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது. குறிப்பிட்ட ஒரு வீட்டில் நீதிமன்ற பிடியாணையின் கீழ் தேடப்பட்டு வரும் குற்றவாளி ஒருவரைக் கைது செய்யும் நடவடிக்கையில் பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த நபர் அதிகாரிகளிடமிருந்து தப்பியோட முயன்றுள்ளார். பொலிஸார் அவரைத் தடுத்து நிறுத்த முயன்றபோது, அந்த நபர் திடீரெனத் தன்னிடம் இருந்த ஆயுதம் ஒன்றை எடுத்து அதிகாரிகளை நோக்கி மிரட்டி தாக்க முற்பட்டுள்ளார்.

இதனால் தற்காப்பு நடவடிக்கையாக அதிகாரி ஒருவர் தனது துப்பாக்கியால் அந்த நபரை நோக்கிச் சுட்டார். இதில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சரிந்த அந்த நபருக்கு, அதிகாரிகள் உடனடியாக முதலுதவி வழங்கி உயிரைக் காப்பாற்ற முயற்சி மேற்கொண்டனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள் யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் நபர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து ஆராய மாகாணத்தின் காவல்துறை கண்காணிப்பு அமைப்பு வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் காவல்துறை தங்களுக்குள்ளாகவும் இது குறித்து உள்வட்டார விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

கனடா

சுவீடன் மன்னர் கனடா விஜயம்

சுவீடன் மன்னர் கார்ல் XVI கஸ்டாஃப் மற்றும் மகாராணி சில்வியா நவம்பர் 18ஆம் திகதி கனடாவுக்கு விஜயம் செய்யஉ ள்ளனர். கனடா ஆளுநர் நாயகம் மேரி சைமன்
கனடா

கனடாவில் ஹாலோவின் இனிப்பு பையில் தங்க மோதிரம்

கனடாவின் வின்னிபிக் பகுதியில் ஹாலோவின் இனிப்பு பண்டங்கள் காணப்பட்ட பையொன்றில் தங்க மோதிரம் ஒன்று, பெண்ணுருவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. தனது மகளின் ஹாலோவின் இனிப்பு பண்ட பொதியில் இவ்வாறு