சினிமா

ஆலுமா டோலுமா எனக்கு பிடிக்காத பாட்டு!.. ஆனா ஹிட்!.. அனிருத் ஓப்பன்!…

தமிழ் சினிமாவில் முக்கிய இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் இவர் இசையமைத்திருக்கிறார். தற்போது, அதிக சம்பளம் வாங்கும் நம்பர் ஒன் இடத்தில் அனிருத் இருக்கிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘உங்களுடைய இசையில் ஹிட் அடித்து ஆனால் உங்களுக்கு முழுவதுமாக திருப்தி இல்லாத ஒரு பாடல் எது?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் சொன்ன அனிருத் ‘அஜித் சார் நடித்த வேதாளம் படத்தில் இடம்பெற்ற ‘ஆலுமா டோலுமா பாடல்தான்.. அந்த பாடலை உருவாக்கி இயக்குனர் சிவாவிடம் கொடுத்துவிட்டேன். ஆனால், நான் நினைத்தபடி வரவில்லை.. ஆனால் அடுத்த நாள் காலை அந்த பாடலை படமாக்க சிவா திட்டமிட்டிருந்தார். அன்று இரவே அவருக்கு போன் செய்து ஷூட்டிங்கை நிறுத்துங்க.. அஜித் சார் ரசிகர்களுக்கு கண்டிப்பா இந்த பாட்டு பிடிக்காது’ என்று சொன்னேன்.

அவர் ஓகே என சொல்லிவிட்டு அந்த பாட்டை சூட் செய்தார். அன்று இரவு எனக்கு போன் செய்து ‘எல்லோருக்கும் பாடல் பிடித்திருக்கிறது’ என்று சொன்னார். ‘நான்தான் ஷூட்டிங் நடத்த வேண்டாம் என்று சொன்னேனே’ என சொன்னேன். அருகில் இருந்த அஜித் சாரிடம் போனை கொடுத்தார். அவரும் தயாரிப்பாளரும் பாடல் மிக்வும் நன்றாக இருப்பதாக பாராட்டினார்கள்.. எனக்கு ஒன்றுமே புரியவில்லை’ என கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்