விளையாட்டு

2027 உலக கோப்பை.. முன்னாள் வீரர் உத்தப்பாவின் கனவு அணியில் வைபவ் சூர்யவன்ஷி..

2027 ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி, புவனேஷ்வர் குமார் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் இடம்பெற வேண்டுமா என்ற கேள்விக்கு, முன்னாள் இந்திய வீரர் ராபின் உத்தப்பா ஆம் என்றே பதிலளித்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடருக்கான தனது கனவு அணியை உத்தப்பா அறிவித்துள்ளார். இந்த அணியை “போம் ஸ்குவாட்” என்று வர்ணித்துள்ள அவர், தற்போதைய ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ள சில முக்கிய வீரர்களை தவிர்த்துவிட்டு, சில அதிரடி மாற்றங்களை செய்துள்ளார். குறிப்பாக 15 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு இந்த அணியில் வாய்ப்பளித்துள்ளார்.

தற்போதைய கேப்டன் ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோரை உத்தப்பா தனது அணியில் தக்கவைத்துள்ளார். மேலும், எதிர்காலம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் ரோகித் சர்மாவுக்கும் தனது அணியில் இடமளித்துள்ளார். யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை மாற்று தொடக்க வீரராக அவர் தேர்வு செய்துள்ளார்.

ரோபின் உத்தப்பாவின் 2027 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி:

ஷுப்மன் கில், ரோகித் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல். ராகுல், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ், அர்ஷதீப் சிங்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்