விளையாட்டு

ஃபாலோ ஆன் ஆகிடுமா இலங்கை

கொழும்பில் நடைபெற்று வரும் இந்தியா–இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டம் பரபரப்பாக முடிந்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 138 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 503 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் தேவ்தத் படிக்கல் 117 ரன்களும், துருவ் ஜூரெல் ஆட்டமிழக்காமல் 115 ரன்களும் விளாசி அசத்தினர். இதுதவிர ரிஷப் பந்த் 63, ஷுப்மன் கில் 50, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 45, ரவீந்திர ஜடேஜா 43 ரன்கள் சேர்த்தனர்.

503 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்தாலும், பசிந்து சூரியபண்டாரா மற்றும் கமிந்து மெண்டிஸ் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். சூரியபண்டாரா 80 ரன்கள் எடுத்தார். பின்னர் சோனல் தினுஷா பொறுப்புடன் விளையாடி 85 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இந்திய பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா அபாரமாக செயல்பட்டு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மனவ் சுதாரும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முகமது சிராஜ் மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில், 83.4 ஓவர்களில் இலங்கை 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் இந்திய அணியை விட இலங்கை இன்னும் 238 ரன்கள் பின்தங்கியுள்ளது. கைவசம் இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே இருப்பதால், இந்த 2 விக்கெட்டையும் இலங்கை சீக்கிரம் இழந்தால் ஃபாலோ ஆன் ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்