ஓ மை கடவுளே, டிராகன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தர்மன் என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினி மருத்துவராக நடித்து வருகிறார். மேலும், அவரின் மனைவியாக சிம்ரனும், மகளாக ராஷி கண்ணாவும் நடித்து வருகிறார்கள்.
மேலும் ரஜினியின் மருமகனாக தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படம் தொடர்பாக பேசிய அஸ்வத் மாரிமுத்து ‘அக்டோபர் மாதம் தர்மன் படத்தின் சூட்டிங் முடிந்துவிடும். ஏற்கனவே இரண்டுகட்ட படப்பிடிப்புகள் முடிந்து விட்டன. ரஜினி சார் ஜென் சி வைபில் இருக்கிறார்.. கண்டிப்பாக தர்மன் திரைப்படம் எல்லோருக்கும் பிடிக்கும்.. செம ஜாலியா இருக்கு…
என்னுடைய முந்தைய படங்களின் ஹீரோக்கள் அசோக் செல்வன், பிரதிப் ஆகியோர் என் நண்பர்கள். ஆனால் ரஜினி சாரை போல ஒரு இனிமையான மனிதரை நான் பார்த்ததே இல்லை.. நெல்சன் சொன்னது போல அவர் ஒரு அற்புதமான மனிதர். நான் எப்போதெல்லாம் அவரின் அருகில் செல்கிறானோ அப்போதெல்லாம் அவர் எழுந்து நிற்கிறார்.. ‘ஏன் சார்?’ என்று கேட்டால் அது ஒரு இயக்குனருக்கு கொடுக்கும் மரியாதை என அவர் சொல்கிறார்.. அவரைப் போல் ஒரு மனிதரை பார்ப்பது கடினம்’ என அவர் கூறியிருக்கிறார்..

