இந்தியா

பெண்ணில் வயிற்றிலிருந்து 14 பேனா, 5 ஸ்பூன்!.. மருத்துவர்கள் அதிர்ச்சி…

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் பெட்லூரிபாலெம் என்கிற கிராமத்தில் வசித்து வரும் 33 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கடந்த சில நாட்களாகவே கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டிருக்கிறார்.

இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்றார்.. அவரின் வயிற்றை பரிசேரித்த போது அவரது வயிற்றில் பேனா, கரண்டிகள் போன்ற பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதைக்கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்..

அதன்பின் அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வயிற்றில் இருந்த 14 பேனாக்கள், 5 மர கரண்டிகள் மற்றும் ஒரு மெழுகுவர்த்தியை மருத்துவர்கள் அகற்றியிருக்கிறார்கள். அந்தப் பெண்ணுக்கு PICA Syndrom என்ற பொருளை விழுங்கும் பிரச்சனை உள்ளதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடம் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்