இந்தியா

அப்பா, அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்க போகும் விஜய்!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்திற்கு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் பேராதரவை கொடுத்திருக்கிறார்கள். இன்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே தவெக முன்னிலை வகித்து வருகிறது.தற்போதைய நிலவரப்படி தவெக 108 தொகுதிகளிலும், திமுக 73 தொகுதிகளிலும், அதிமுக 53 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கிறது. ஆட்சி அமைக்க தவெகவுக்கு இன்னும் 10 தொகுதிகள் தேவை. அனேகமாக தவெகவுக்கு அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரவு கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து விஜய் முதல்வராவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

ஒருபக்கம் விஜய் தான் போட்டியிட்ட பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளார். இதையஎடுத்து வெற்றி சான்றிதழை வாங்குவதற்காக விஜய் நுங்கம்பாக்கத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு விஜய் செல்வதாக செய்திகள் வெளியானது.

ஆனல், நீலாங்கரை வீட்டிலிருந்து கிளம்பிய விஜய் அடையாறில் வசிக்கும் தனது பெற்றோரை சந்திக்க செல்வது தெரியவந்திருக்கிறது. தனது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் அம்மா சோபா ஆகிய இருவரிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு அதன்பின் நுங்கம்பாக்கம் சென்று வெற்றி சான்றிதழை வாங்குவார் என சொல்லப்பட்டிருக்கிறது.

நீலாங்கரை வீட்டிலிருந்து அடையாறுக்கு விஜய் செல்லும் வழியெங்கும் பொதுமக்களும், விஜயின் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்