கார்த்தியை வைத்து மித்ரன் இயக்கிய சர்தார் திரைப்படம் வெற்றி பெற்றதால் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியிருக்கிறது.. விரைவில் இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் இயக்குனர் மித்ரன், கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று செய்தியாளரிடம் பேசிய கார்த்தி ‘தற்போதெல்லாம் புதிய திரைப்படங்கள் உடனடியாக ஆன்லைனில் வந்து விடுகிறது.. அது சினிமா தொழிலை பாதிக்கிறது.. எங்கள் துறையிலிருந்து ஒருவர் முதலமைச்சராக வந்திருப்பதால் இந்த விஷயம் அவருக்கு நன்றாகவே தெரியும்..
அவர் தேவையான நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்.. நான் முதல்வரை சந்தித்தபோது கூட ‘அண்ணா மற்றவர்களை விட உங்களுக்கு இந்த விஷயம் நன்றாக தெரியும்.. நீங்களே பார்த்துக்கோங்க’ என்று சொல்லியிருக்கிறேன்.. அவர் பார்த்துக்கொள்வார்’ என என கூறியிருக்கிறார்.

