ஆரண்ய காண்டம் என்கிற திரைப்படத்தை இயக்கி கவனம் ஈர்த்தவர் தியாகராஜன் குமாரராஜா. அதன்பின் பல வருடங்கள் கழித்து சூப்பர் டீலர்ஸ் என்கிற திரைப்படத்தை இயக்கினார்.
அந்த படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்திருந்தார். மேலும் பகத் பாஸில், சமந்தா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படமும் பேசப்பட்டது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு தேசிய விருதும் கொடுக்கப்பட்டது.தற்போது மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து பாக்கெட் நாவல் என்கிற திரைப்படத்தை தியாகராஜன் குமாரராஜா இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைப்பதாக சொல்லப்பட்டது.
தற்போது இந்த படத்தின் முழு படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. அதேநேரம் இளையராஜாவுக்கும் தியாகராஜன் குமாரராஜாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த படத்திலிருந்து இளையராஜா விலகி விட்டதாகவும், அவருக்கு பதில் ஜிவி பிரகாஷ் இசையமைக்கப் போவதாகவும் தற்போது செய்திகள் வெளியாகியிருக்கிறது.

