சினிமா

அட்லி – அல்லு அர்ஜூன் படம் முடிவதற்குள் கர்ப்பம்.. ஆக்சன் காட்சிகளில் நடிப்பாரா தீபிகா படுகோன்?

பாலிவுட் முன்னணி நடிகை தீபிகா படுகோன், தனது இரண்டாவது கர்ப்ப காலத்திலும் சற்றும் ஓய்வின்றி அடுத்தடுத்த படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்து வருகிறார்.

ரன்வீர் சிங் – தீபிகா தம்பதியினருக்கு ஏற்கனவே துவா என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், சமீபத்தில் தங்களின் இரண்டாவது வருகையை சமூக வலைதளத்தில் உறுதி செய்தனர்.

கர்ப்பமாக இருந்தாலும், தான் ஒப்புக்கொண்ட படங்களின் தயாரிப்பாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் தீபிகா உறுதியாக உள்ளார்.

தற்போது அவர் ‘கிங்’ மற்றும் ‘ராகா’ ஆகிய இரண்டு பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். இதற்காக தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் பாடல் படப்பிடிப்பில் அவர் பங்கேற்க உள்ளார். இதில் அபிஷேக் பச்சன் மற்றும் சுஹானா கான் ஆகியோரும் இணைய உள்ளனர்.

இந்த வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு இந்தியா திரும்பும் தீபிகா, மும்பையில் அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீ கூட்டணியில் உருவாகும் ‘ராகா’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். சுமார் 50 முதல் 60 நாட்கள் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளிலும் அவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீபிகாவின் இந்த அர்ப்பணிப்பு உணர்வை கண்டு படக்குழுவினர் வியந்து போயுள்ளனர். தனது உடல்நிலையை சீராக கவனித்துக்கொண்டே, தொழில்முறை கடமைகளையும் அவர் செவ்வனே செய்து வருகிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்