வடகொரியா மிகவும் கட்டுப்பாடு கொண்ட ஒரு நாடு. அங்கு எல்லாமே ராணுவ விதிமுறைகள்தான். பல வருடங்களாகவே அங்கு நடப்பது வாரிசு அரசுதான்.தற்போது அங்கு கிம் ஜாங் உன் அதிபராக இருக்கிறார். அங்கே அரசுக்கு தெரியாமல் எதுவும் செய்ய முடியாது.. மக்களின் அன்றாட நடவடிக்கைகளை கூட அங்கே கவனித்துக் கொண்டே இருப்பார்கள். அரசு எதிர்த்து ஒரு வார்த்தை பேசினால் கூட பல வருடங்கள் சிறைதான். மக்களே உளவாளியாக இருப்பார்கள். இந்நிலையில்தான், வடகொரியாவிலிருந்து ஒரு குடும்பம் 10 வருடமாக திட்டமிட்டு தென்கொரியாவுக்கு தப்பி சென்றிருக்கிறது.
இதற்காக கடல் வழிப்பாதையை தேர்ந்தெடுத்துள்ளனர். கிம் என்பவர் தன் மகனை மீன்பிடித் தொழிலுக்கு அனுப்பியிருக்கிறார். அங்கு கடலின் வேகம், ராணுவ கண்காணிப்பு, ரேடாலிருந்து தப்பிப்பது எப்படி பல விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த திட்டத்தை போட்ட தந்தை கிம் உயிரிழந்து விட்டார்.
எனவே அவர் மகன்கள் கிம்-இல்-ஹ்யோக், கிம்-யி-ஹ்யோக் இருவரும் தந்தையின் திட்டத்தை நிறைவேற்றினார்கள். முதலில் மீன் பிடி தொழிலை கற்றுக்கொண்டு ஒரு சொந்தமாக ஒரு படகை வாங்கியிருக்கிறார்கள். மீன் பிடிக்க செல்லும்போது வல் நடவடிக்கைகளை நோட்டமிட்டிருக்கிறார்கள். அவர்கள் தப்பித்த அன்று புயல் காரணமாக பெரிய கண்காணிப்பு எதுவும் இல்லை.. படகில் ஒரு கர்ப்பிணி மனைவியும் இருந்துள்ளார்.
அதோடு நான்கு மற்றும் ஆறு வயது குழந்தை இருவரை மூட்டைக்குள் மறைத்து கொண்டு சென்றுள்ளனர். படகை மிகவும் மெதுவாக நகர்த்தியிருக்கிறார்கள். ரேடாரில் பார்க்கும் போது ஏதோ ஒரு சாதாரண பொருள் மிதப்பது போலவே தோன்றும்.. யாரும் எதுவும் பேசவில்லை.. மெதுவாக படகை செலுத்தி தென்கொரியாவின் யோன்ப்யோங் தீவை அடைந்துள்ளனர். நான்கு மாதங்களுக்கு பின்பு அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.. வடகொரியாவில் இருந்து தப்பித்த இரண்டு மாதங்களில் கிம் யி ஹ்யோக் உயிரிழந்துள்ளார். தற்போது கிம் இல் ஹ்யோக் தென்கொரியாவில் சமையல்காரராக பயிற்சி பெற்று வருகிறார்.

