சினிமா

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்

கன்னட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்து 2018ம் வருடம் வெளியான கேஜிஎப் திரைப்படம் கன்னடத்தில் உருவாக்கப்பட்டிருந்தாலும் தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழியிலும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. கர்நாடக பகுதிகளில் செயல்படும் கோலார் தங்கச் சுரங்கத்தின் பின்னணியில் இப்படத்தின் கதையை உருவாக்கி இருந்தார் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல்.

இந்த படம் சூப்பர் ஹிட் அடித்ததால் கேஜிஎப் 2 திரைப்படம் 2022ம் வருடம் வெளியாகி 1300 கோடி வரை வசூலை அள்ளியது. இந்த படமும் கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளின் நல்ல வரவேற்பை பெற்றது.. இந்த படத்தின் இறுதி காட்சியில் தான் உருவாக்கிய தங்கங்களை கப்பல்களில் எடுத்துக்கொண்டு ஹீரோ யாஷ் கடலில் செல்வது போலவும் அப்போது இந்திய விமானப்படை தாக்கவே அவர் கடலில் விழுவது போலவும் படத்தை முடித்திருந்தனர்.

கேஜிஎப் 2 படம் வழியாகி நான்கு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது வரை KGF3 தொடர்பான அப்டேட் ஏதும் வெளியாகவில்லை. இந்த படத்திற்கு பெண் பிரபாஸை வைத்து சலார் படத்தை பிரசாந்த் நீல் இயக்கினார். தற்போது ஜூனியர் என்.டி.ஆரை வைத்து வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார்.. இந்த படமே 2017ம் வருடம் ஜூன் மாதம்தான் வெளியாகிறது என்கிறார்கள்.

இந்நிலையில் KGF3 பற்றிய அப்டேட் கொடுத்த நடிகர் யாஷ் KGF3 படத்திற்கு தற்போது எந்த திட்டமும் இல்லை.. தற்போது நான் Toxic, Ramayana மற்றும் Ramayana 2 ஆகிய மூன்று படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். KGF 3 எப்போது என்பதை பிரசாந்த் நீல்தான் முடிவு செய்வார்’ என கூறியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்